570. என்னையே எரிபலியாக என்றும் உள்ள ஆவியினாலே
என்னையே எரிபலியாக என்றும் உள்ள ஆவியினாலே
அன்புடன் படைக்க வந்தேனே தந்தையே ஏற்றருள்வீரே
1. அன்பு மகன் ஈசாக்கைப் பலியிடக் கேட்டதுமே
எந்தவித தயக்கம் இன்றி ஆபிரகாம் சென்றாரே
சொந்தபந்த உறவுகளை விறகெனச் சுமந்து வந்தேன்
எந்தன் நெஞ்ச ஆசைகளைப் பலியெனக் கொடுக்க வந்தேன்
துன்ப துயர் நிலைகளிலும் உம்மைப் புகழ்ந்தேத்திடவே - 2
2. முதன்மையான முதல் கட்டளையை அறிந்து கொண்டேன்
முழுமையான உம்மை அன்பு செய்ய எனையளித்தேன்
கடினமானதொரு கட்டளையைப் புரிந்து கொண்டேன்
காணும் பிற மனிதர்களைக் கனிவுடன் ஏற்கத் தந்தேன்
இரக்கத்தை விரும்பும் உந்தன் விருப்பத்தை நிறைவேற்றிடவே