571. என்னையே தந்தேன் இறைவா என் எளிய காணிக்கையாக
என்னையே தந்தேன் இறைவா என் எளிய காணிக்கையாக
என்னையே படைத்தேன் தலைவா
என் அன்பினை அர்ப்பணமாக்க
ஏற்றிடுவாய் இறைவா என்னை மாற்றிடுவாய்த் தலைவா
1. கோதுமை மணியோடு நான் சேர்ந்து களிப்புடன் உடைபடுவேன்
திராட்சை இரசத்தோடு நான் இணைந்து தியாகத்தின் சுடராவேன்
இறையன்பு பிறரன்புப் பாடத்தையே என்றென்றும் நான் பயில்வேன்
உமதன்பின் சாட்சியாய் திகழ்ந்திடுவேன்
அன்றாடம் அடியெடுப்பேன்
2. இன்பங்கள் துன்பங்கள் யாவையுமே இறைவா நான் தருகின்றேன்
உள்ளத்தின் ஏக்கங்கள் எல்லாமுமே உம் பதம் படைக்கின்றேன்
உந்தன் திரு வார்த்தையில் பலம் கண்டு
இன்றே நான் வாழ்ந்திடுவேன்
ஆறுதல் அளித்திடும் நலம் கொண்டு
அதிசயங்கள் அனுதினம் காண்பேன்