முகப்பு


574. எனக்காக நீ தந்த வாழ்வை ஏந்தி
எனக்காக நீ தந்த வாழ்வை ஏந்தி
உனக்காக நான் தந்தேன் இறைவா
இதை ஏற்று உனதாக மாற்றி அருட்பலியில்
எனை நீ இணைப்பாய் இறைவா

1. அணையாத தீபம் உன் திரு இதயம்
ஏற்றிட வந்தேன் என் சிறு அகலை - 2
உலகின் ஒளியாய் இருப்பவனே
உன் கோயில் நானாக மாற்றிடுவாய்
ஏற்றிடுவாய் மாற்றிடுவாய்
இறைஞ்சுகின்றேன் இரங்கிடுவாய் - 2

2. ஏங்கும் வழியில் தேங்கிய நீரும்
அலைஓயா மனமும் ஏந்தி வந்தேன் - 2
எதையும் தாங்கும் இறையவனே
உன்னோடு ஒன்றாக ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய்