முகப்பு


581. எல்லோரும் நலம் வாழ ஒரு காணிக்கை
எல்லோரும் நலம் வாழ ஒரு காணிக்கை
என் இதயம் தரும் காணிக்கை - 2
கனிவோடு இதை ஏற்று அருள் தாருமே - 2

1. நல்ல விளைநிலமாக எனை மாற்றுமே - உம்
வார்த்தை எனும் உரம் ஊற்றுமே - 2
ஒன்றுக்கு நூறாய் நான் கனி தந்திட - 2
எல்லோரும் பகிர்ந்துண்டு பசியாறவே - 2

2. எந்தன் அயலார்க்கு என்றும் இரங்கும் மனம்
தந்தை நீர் விரும்பும் பலி - 2
உன் அன்பு வீட்டில் நான் இரக்கம் பெற - 2
என் அன்பைப் பிறர் வாழப் பலியாக்கினேன் - 2