582. எளிய என் இதயம் உன் கரங்களில் கொணர்ந்தேன்
எளிய என் இதயம் உன் கரங்களில் கொணர்ந்தேன்
கனிவாய் ஏற்பாய் என் இறைவா - 2
இதயம் என் இதயம் அமைதிக்கான என் காணிக்கை
மாற்றும் உருமாற்றும் அமைதியின் கருவியாய் - 2
1. மலரென்றால் சிறுபொழுதில் வதங்கிவிடும் - என்
மனம் என்றால் உன் பாதம் அலங்கரிக்கும்
விளக்கென்றால் ஒரு நேரம் அணைந்துவிடும் - என்
வாழ்வென்றும் உன் முன்னே எரிந்து நிற்கும்
உம் கருணைக் களவில்லை என் காணிக்கை நிகரில்லை - 2
காரீச / ரீசாநி / சாநீத / நீதாப
கா மா பா / கரி சா
குறையோடு ஏற்று உன் ஆற்றலால் எனை நிரப்பு - 2 இதயம்
2. பொன்னும் பொருளும் நாள்பட மங்கும்
என்செயல் என்றென்றும் உன் முன் மின்னும்
வழிகள் பலவும் இருளில் முடியும்
உன் வழி ஒவ்வொன்றும் ஒளியில் முடியும்
அன்பின் நல்சுரங்கம் நீ அர்ப்பணம் இயேசுவே - 2
காரீச / ரீசாநி / சாநீத / நீதாப
கா மா பா / கரி சா
அன்பின் நல் ஆசானாய் உன்னடி நான் தொடர்வேன் - 2 இதயம்