முகப்பு


586. ஏற்றிடுவீர் பிதாவே மரு ஏதுமில்லா அப்பமிதை நீர்
ஏற்றிடுவீர் பிதாவே மரு ஏதுமில்லா அப்பமிதை நீர்
மாற்றிடுவீர் உம் சுதனுடலாக மாசுகள் நீங்க அருள் நிறைந்தோங்க

1. தகுதியில்லாத அடியோர் சேர்ந்து
திருஅவை பெயரால் குருவின் கையால் - 2
மிகுந்த அன்போடு உடலுயிர் யாவும்
மனமுவந்தளித்தோம் மிகத் தயைகூர்ந்து

2. புனித நல்வாழ்வில் வளர்ந்தே நாளும்
புகழந்தும்மைப் போற்றிப் பணிகள் ஆற்றி - 2
மனிதர் எல்லோரும் முடிவில்லாத
மகிமையின் முடிவை அடைந்திடச் செய்வீர்