முகப்பு


587. ஏற்றுக்கொண்டாய் இறைவா - நான்
ஏற்றுக்கொண்டாய் இறைவா - நான்
இருப்பது போல் என்னை ஏற்றுக் கொண்டாய்
ஏற்றுக்கொண்டாய் இறைவா - 2

1. பறவையாக நான் இருந்திருந்தால் பறந்து பறந்து பாடிடுவேன்
வானம்பாடியாய் இருந்திருந்தால் கானம் பாடி மகிழ்ந்திருப்பேன்
ஆனால் நான் நானாவேன் - 2
அதற்கு நான் நன்றி சொல்கின்றேன்

2. மீனினமாக நான் இருந்திருந்தால் நீந்தி நீந்தி வாழ்ந்திருப்பேன்
தேனீயாக நான் இருந்திருந்தால் தேனை உண்டு மகிழ்ந்திருப்பேன்
ஆனால் நான் நானாவேன் - 2
அதற்கு நான் நன்றி சொல்கின்றேன்