596. காணிக்கை தந்தேன் தேவா
காணிக்கை தந்தேன் தேவா - என்னைக்
காவலாய் வைத்தேன் நெஞ்சில் உன்னை
காலமும் நீ துணை எந்தக் காலமும் நீ துணை
1. எளிமை மென்மை பணிவென்னும் எனது புனித மலர்களை
ஒளிமிகும் உன் தாளில் வைத்து
என்றுமே ஒன்றியே உம்மிலே வாழவே - 2
2. சிலுவை தொடரும் வாழ்வில் என் சிரம் நிமிர்ந்து
பூவில் உன் அலுவலாற்றி அலகை ஆட்சி வீழ
நின் அரசிலே ஊழியம் புரியவே - 2
காவலாய் வைத்தேன் நெஞ்சில் உன்னை
காலமும் நீ துணை எந்தக் காலமும் நீ துணை
1. எளிமை மென்மை பணிவென்னும் எனது புனித மலர்களை
ஒளிமிகும் உன் தாளில் வைத்து
என்றுமே ஒன்றியே உம்மிலே வாழவே - 2
2. சிலுவை தொடரும் வாழ்வில் என் சிரம் நிமிர்ந்து
பூவில் உன் அலுவலாற்றி அலகை ஆட்சி வீழ
நின் அரசிலே ஊழியம் புரியவே - 2