597. காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்
காணிக்கை தந்தோம் கனிவாய் ஏற்பாய்
காலத்தைக் கடந்தவா இறைவா
எம் கண்ணீரைத் தருகின்றோம் தலைவா - 2
1. கண்ணீரிலும் செந்நீரிலும் மூழ்கிடும் எம் மண்ணைத் தருகின்றோம்
ஏற்பாய் என் தேவா - 2 காயமும் குருதியும் நிதம் காணும் - 2
எம் உறவுகளைத் தருகின்றோம் ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்
2. துன்பங்களில் வாடுகின்ற
நொறுங்குண்ட உள்ளங்களைத் தருகின்றோம்
ஏற்பாய் என் தேவா - 2
நியாயமும் நீதியும் இனி நிலவ - 2
எம் நிலைகளையே ஏற்றிடுவாய் ஏற்றிடுவாய் நிலை மாற்றிடுவாய்