முகப்பு


602. காணிக்கை தர வந்தோம்கலங்கியஎங்களின் நெஞ்சங்களை
காணிக்கை தர வந்தோம்கலங்கியஎங்களின் நெஞ்சங்களை
காணிக்கை தரவந்தோம் கருணைமிகும் உந்தன் பாதங்களில் - 2

1. உண்மை உறங்கிடலாம் உள்ளம் இருளினில் மூழ்கிடலாம் - 2
உன்னதன் உன்னை உணர்ந்துவிட்டால் - அந்த
இருளிலும் அருள் ஒளி தென்படுமே - 2
துன்பம் மறைந்திடவும் துயரங்கள் களைந்திடவும் - 2
தேவனுன் பாதத்தில் சரணடைந்தோம் - 2

2. இரசத்துடன் நீர் கலந்து உந்தன் திரு விலாக் குருதி கண்டோம்
சிந்திடும் உந்தன் அன்பின் துளிகள் - ஏந்தி
இதயத்தை மலரெனப் படைத்துவிட்டோம் - 2
பன்மை மறந்திடவும் பகைமை அழிந்திடவும் - 2
பரமனுன் பாதத்தைப் பணிந்திடுவோம் - 2