முகப்பு


610. காலைப் பனியில் நனைந்த மலர்களைக்
காலைப் பனியில் நனைந்த மலர்களைக்
காணிக்கையாகத் தருகின்றேன்
கனிவுடன் ஏற்றுஎந்தன் மனத்தைக் கனிதரும் மலராய் மாற்றிடுவாய்

1. படைப்புகள் முழுமையும் படைத்தவரே
உம் மனம் குளிர எதைக் கொடுப்பேன்
தேடித் தேடி அலைந்தபோதும்
புதிதாய் எதுவும் கிடைக்கவில்லை
இயற்கை எல்லாம் காணிக்கை தந்திட - 2
ஏழை நான் எதைத் தருவேன்
ஏழை என் இதயம் ஒன்றைத் தவிர

2. சேற்றில் வாழும் மலர்களில் நானும்
பாவ சகதியில் வாழ்கின்றேன்
ஒளிர்ந்து மடிந்திடும் மெழுகினைப்போல
உன்னிலே என்னை மாற்றிடுவாய்
வியர்வையில் விளைந்த உழைப்பின் பயனை - 2
வேந்தனே நீயும் ஏற்றிடுவாய்
ஏழைக் கைம்பெண் காணிக்கை போல