முகப்பு


613. கையால் இதை ஏற்றருளே - எந்தன்
கையால் இதை ஏற்றருளே - எந்தன்
காணிக்கையை அருள்செய் இறையே
மெய்யாய் ஏழையின் காணிக்கை தனையே
மேன்மையாய் ஏற்றருள் செய்வாய் உன் துணையே

1. பூவிலென் செபங்கள் காணிக்கைப் பொருட்கள்
யாவையும் செலுத்தி உன் நாமத்தைப் புகழ்வேன்
பாவி உன் அடிமை ஊழியன் மைந்தன்
பாரிலென் தளைகளை நீரவிழ்த்தீரே

2. உமக்கெந்தன் தோத்திரமாம் பலியினையே
இமைப்பினில் ஈந்தனன் இது எந்தன் பணியே
அமலாயுன் இரட்சிப்பின் பாத்திரந்தனையே
சுமந்துந்தன் நாமத்தைத் தொழுவேன் நான் இனியே