முகப்பு


624. தருவதெல்லாம் உனதன்றோ இறைவா
தருவதெல்லாம் உனதன்றோ இறைவா
தரணியெல்லாம் உம்முடையதே தலைவா
ஏழை எந்தன் வாழ்வினையே ஏற்று புனிதமாக்குவாய்
ஏற்றிடுவாய்ப் புதிதாய் மாற்றிடுவாய்

1. நிறைந்த வாழ்வினைக் கொடுத்தாய் இறைவா
மறந்து உந்தன் அன்பிலிருந்து பிரிந்து சென்றேனே
அன்பனே நண்பனே என்னையே தந்தேனே - 2
அருள்வளத்தால் கொடுத்த கொடைக்கு
நன்றியாக எனைத் தந்தேன்
ஏற்றிடுவாய்ப் புதிதாய் மாற்றிடுவாய் - 2

2. இளைஞர் உலகை நீ படைத்தாய் இறைவா - உந்தன்
இதய உணர்வுகளை அவர்களுக்களித்தாய்
புனிதனே இறைவனே பணிந்தேனே உன் பாதமே
திருவுளத்தை வியந்து புகழ்ந்து
உந்தன் பணியில் எனைத் தந்தேன்
ஏற்றிடுவாய்ப் புதிதாய் மாற்றிடுவாய்