முகப்பு


629. தீப ஒளியும் தூபப் புகையும் உந்தன் நினைவாகும்
தீப ஒளியும் தூபப் புகையும் உந்தன் நினைவாகும்
மலரின் மணமும் கனியின் சுவையும் உந்தன் புகழ்பாடும்
மனித மாண்பு மலரும் வாழ்வே நீ விரும்பும் பலியாகும்
மனிதம் எங்கும் மலர வேண்டி பலியாய்வருகின்றோம் - தீப ஒளியும்

1. ஏழை எங்கள் வாழ்விலும் விடியல் உண்டு என்றவா - 2
புதிய வானம் புதிய பூமி புலரும் நாளைக் காணவே - 2
வருகின்றோம் யாம் தருகின்றோம்வாழ்வைப் பலியாய் தருகின்றோம்
புனிதம் உந்தன் மலர்ப்பதம்

2. நீதி வாழ்வின் உரிமையே இறைவன் அரசு என்றவா - 2
நீதி நேர்மை தளைத்து ஓங்கும்
வாழ்வு உலகில் அமையவே - 2 வருகின்றோம்