முகப்பு


631. தேவா உந்தன் பலியாக என்னைத் தந்தேன் - என்றும்
தேவா உந்தன் பலியாக என்னைத் தந்தேன் - என்றும்
எந்தன் பணி வாழ்வை ஏற்றிடுவாய் - 2

1. அன்பொன்றே தினம் தேடி அலைகின்ற
நெஞ்சங்கள் வீதியில் ஆயிரமே
அரவணைக்கும் கரம் தேடி ஆர்வமுடன்
காத்திருக்கும் மனிதர்கள் கூட்டமிங்கே - 2
அன்போடு நான் வாழுவேன்
சிந்தும் கண்ணீரை நான் மாற்றுவேன் - 2
நல் அன்பைத் தேடும் புவிமாந்தர் வாழ
என் வாழ்வை பலியாக்குவேன் - 2

2. விடியாதா பொழுதென்று வீங்கிடும் விழியோடு
ஏங்கிடும் மாந்தர் இங்கே
முடியாது என்றெண்ணி முகம் சோர்ந்து போகும்
பரிதாப வாழ்க்கை இங்கே - 2
தேவா நான் சுடராகுவேன்
எங்கும் நம்பிக்கை ஒளியேற்றுவேன் - 2
போராடும் நெஞ்சில் போராட்டம் நீக்க
என் வாழ்வைப் பலியாக்குவேன் - 2