முகப்பு


636. படைத்ததெல்லாம் தரவந்தோம்
படைத்ததெல்லாம் தரவந்தோம்
பரம் பொருளே உம் திருவடியில் - 2
உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும் என் வாழ்வினிலே ஒளி வீசும்

1. உழைப்பினிலே கிடைத்திட்ட பொருளெல்லாம்
உன்னதரே உந்தன் மகிமைக்கே - 2
தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய் - 2
தாழ்ந்து பணிந்து தருகின்றோம் - 2 தருகின்றோம் - 2

2. வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம்
வல்லவரே உந்தன் மகிமைக்கே - 2
கருணையின் தலைவா ஏற்றிடுவாய் - 2
கனிவாய் உவந்து தருகின்றோம் - 2 தருகின்றோம் - 2