முகப்பு


643. பலியாக என்னைத் தந்தேன் நீ பரிசாக உன்னைத் தந்தாய்
பலியாக என்னைத் தந்தேன் நீ பரிசாக உன்னைத் தந்தாய்
உள்ளதெல்லாம் கொடுத்தேன் நீ உன்னையே அள்ளித் தந்தாய்
கண்மணி போலக் காக்கும் உந்தன்
கரத்தில் என்னை முழுதும் தந்தேன்
என்னோடு ஒன்றாகினாய் எல்லாமே உனதாக்கினாய்

1. வாழ்வென்பதோ வெள்ளத்திரை - அதில்
நிகழ்வென்பதோ நிழலோவியம் - 2
நிலையான உறவாக யாரும் இல்லை
குலையாத நம்பிக்கை எதிலும் இல்லை - 2
நீ இன்றி என் வாழ்வில் நிறைவே இல்லை
நீ என்னில் வந்தாலோ குறைவே இல்லை

2. இருள் நீக்கிடும் ஒளிவெள்ளம் நீ - என்
இதயம் தேடும் அருள்வள்ளல் நீ - 2
உன் வார்த்தை ஒளிதீபம் எரிகின்றதே
என் வாழ்வின் கீழ்வானம் சிவக்கின்றதே - 2
இருள் நேர அய்யங்கள் தடுமாறல்கள்
எனை நீங்கிப் புதுவாழ்வின் ஒளி தோன்றுதே