முகப்பு


648. புதியதோர் உலகைப் படைத்திட வந்தேன் - உமக்கு
புதியதோர் உலகைப் படைத்திட வந்தேன் - உமக்கு
புதியதோர் மனத்தைக் கொடுத்திட வந்தேன்
இறைவா இறைவா சரணம் தலைவா

1. இன்று நீதி நியாயம் நேர்மை நிலவிடும் உலகம்
என்றும் அன்பு அமைதி அறங்கள் தழைத்திடும் உலகம்
சமத்துவ சமுதாயம் வழங்கிடும் உலகம் - எந்த
சாதிப் பிரிவு அனைத்தும் தவிர்த்திடும் உலகம்

2. இன்று வாழ்வில் எளிமை தூய்மை துலங்கிடும் உலகம்
மக்கள் சொல்லில் செயலில் வாய்மை விளங்கிடும் உலகம்
ஏழ்மையின் சிரிப்பில் உம்மைக் கண்டிடும் உலகம்
எங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியமும் தந்திடும் உலகம்