652. மல்லிகைப் பூக்களை மெல்லிய பாதத்தில் நான் படைத்தேன்
மல்லிகைப் பூக்களை மெல்லிய பாதத்தில் நான் படைத்தேன்
வானமும் பூமியும் படைத்த என் தேவனை அடி தொழுதேன் ஆ
1. கோதுமை அப்ப இரசத்துடனே என்னையும் தந்தேன் ஏற்பாயே
என்னுடன் நீயும் தங்கிடுமோர் ஆலயமாகச் செய்வாயே - 2
தன்னலம் மறந்திட பிறர் நலம் வளர்த்திட - 2
உண்மைகள் மண்ணில் மலர்ந்திட - என்
உள்ளத்தைத் தருவேன் அருள்வாயே - 2 மகிழ்வோடு அருள்வாயே
2. உழைப்பின் கனிகள் உவந்தளித்தேன்
உன்னத வாழ்வில் நிலைத்திடவே
படைப்பின் இறைவா பதம் பணிந்தேன்
பலிதனில் நாளும் இணைந்திடவே - 2
நறுமணத் தூபம்போல் இதயத்தை உயர்த்தினேன் - 2
இனி வரும் எந்நாளுமே இயேசுவின் அருளால்
வளர்ந்திடுவேன் - 2 நலமோடு வாழ்ந்திடுவேன்