முகப்பு


1013.அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா
அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா
அருளைப் பொழிவதும் நீதானம்மா
ஆறுதல் அளிப்பதும் நீதானம்மா

1. மணிமுடி அணிந்த மாதவளே - இந்த
மாநிலம் காத்திடும் தூயவளே - 2
உண்மையை ஊட்டிடும் பேரழகே - 2 எந்தன்
உள்ளத்தில் நிறைந்திடும் நறுமலரே

2. துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே - நீ
துணை தந்து காத்திட வேண்டும் அம்மா - 2
அன்பினில் என்றுமே அரவணைத் தென்னை - 2
அருளினில் வளர்த்திட வேண்டும் அம்மா