முகப்பு


1023.அருள் தரும் மாமரியே உம் அடைக்கலம் எந்தாளும்
அருள் தரும் மாமரியே உம் அடைக்கலம் எந்தாளும்
உன் பதம் நாடி உன் புகழ் பாடி
என்றுமே வாழ்ந்திடுவோம் நின் அருள் நீ தருவாய் - 2

1. இன்னல்கள் நிறைந்த இவ்வுலகினிலே
இருப்பதோ உனதுதுணையினிலே
மின்னல் போல் வாழ்வினிலே உன்னருள் வேண்டுமம்மா - 2
அன்னை எம்மை நிதமும் அரவணைப்பீரே
விண்ணின் மழை பெய்து விளைவுகள் மேலோங்க - 2
வேண்டினோம் மாதரசே - 2

2. தாயுடன் இருக்கும் சேய் மகிழும் தளிருடன் இருக்கும் பூ சிரிக்கும்
காலமெல்லாம் அருள் பொழிந்தே என்றுமே காத்திடுவாய் - 2
அன்னை எம்மை நிதமும் அரவணைப்பீரே
விண்ணின் மழை செய்து விளைவுகள் மேலோங்க - 2
வேண்டினோம் மாதரசே - 2