முகப்பு


1025.அருள்நிறை மரியே வாழ்கவே ஆண்டவர் உம்முடனே
அருள்நிறை மரியே வாழ்கவே ஆண்டவர் உம்முடனே - 2
கன்னியர்க்கெல்லாம் உயர்ந்தவளே - உன்
நாமம் என்றும் வாழியவே

1. இசுரேல் குலத்தின் திருமகளே - நீ
ஆண்டவர் அடிமை என்றவளே - 2
தூய ஆவியால் இயேசுவை ஈன்றவளே - இந்த
அகிலத்தின் தாயும் ஆனவளே

2. பரமனை ஈன்றிடப் பேறுபெற்றாய் - அவர்
பார்புகழ் தேவனாய் உருக்கொடுத்தாய் - 2 இனி
அன்புடன் எமையும் ஏற்றருள்வாய் - எம்
அன்னையாய் நீயும் அரவணைப்பாய்