முகப்பு


1046.ஆண்டவரை எனதுள்ளம் பெருமைப்படுத்திடுதே
ஆண்டவரை எனதுள்ளம் பெருமைப்படுத்திடுதே - 4

1. கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது
ஏனெனில் அவர்தம் அடிமையின் தாழ்நிலை கண்ணோக்கினார்

2. இதுமுதல் எல்லாத் தலைமுறை என்னைப் பேறுபெற்றவள் என்பாரே
வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயலைச் செய்துள்ளார்

3. அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு இரக்கம் காட்டி வருகின்றார்
தாழ்நிலை இருப்போரை உயர்த்துகிறார் பசித்தோரை நிரப்புகிறார்