முகப்பு


1055.இறைவனின் அன்னையே எங்களின் தாயே
இறைவனின் அன்னையே எங்களின் தாயே
இறையருள் பெற்றுச் செல்ல வந்தோம்
எங்கள் குறைகளை நிறைவாக்கி பகைமையை உறவாக்கி
வேண்டும் வரங்கள் பெற்றுத் தருவாய்
பொற்பை நகர் காவலே திருக்கல்யாண மாதாவே - 2

1. எங்கள் குறை கேட்டுத் தாழ்ச்சி வழிநின்று
மண்ணின் கடவுளின் பேழையானாய்
ஏழை எளியவரின் உரிமை வாழ்வுக்காய்
புரட்சிப் பாடலொன்று நீ இசைத்தாய்
திருமண விருந்தில் அதிசயம் நிகழவே
கலங்கிய எலிசபெத் மனத்திடம் அடையவே
உடனிருப்பவளே உதவிசெய்பவளே
எங்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டுமம்மா - பொற்பை

2. ஆணும் பெண்ணுமாய் இணைந்து வாழ்வதும்
இறை தந்த திருமண திருவருட்சாதனம்
தவழும் மழலையின் உதிக்கும் புன்னகையும்
பாலை மனங்களுக்குப் புதுச் சோலையாகும்
ஏங்கும் இதயங்களின் ஆறுதல் நீயே
விரியும் கரங்களுக்குப் புகலிடம் நீயே
உடனிருப்பவளே உதவிசெய்பவளே
எங்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டுமம்மா - பொற்பை