முகப்பு


1063.எல்லோரும் கொண்டாடும் அம்மா மரி
எல்லோரும் கொண்டாடும் அம்மா மரி
எல்லோரும் மன்றாடும் ஆரோக்கியம் நீ - 2
உன்னைக் கண்டோம் கண்டோம் வேளைநகரிலே
கருணை அடைந்தோமே ‡ இன்று குறைகள் தீர்த்தோமே

1. அலைஅலையாக பலவகை மாந்தர் இங்கே கூடுகின்றார்
ஆதவன் போல பேதமில்லாமல் ஆறுதல் பொழிகின்றார் - 2
உம் இனமொழி பேதமில்லை எல்லா மதத்தாரும் உந்தன் பிள்ளை
நீ உலக மாந்தரின் உள்ளக் கோயிலில் வாழும் அரசியம்மா

2. வருகை என்றழைக்கும் வேளாங்கண்ணி எங்கள் தாய்நாடு
உருகிட வைக்கும் உன் திருக்கோயில் எங்கள் தாய்வீடு - 2
இந்த உண்மைக்கு யாம் சாட்சி இது உலகம் அறிந்த மாட்சி
உந்தன் குடும்பமாகவே கூடிப் போற்றினோம் மரியே வாழியவே