1066.எனதான்மா இறையவனை ஏற்றியே மகிழ்கின்றது
எனதான்மா இறையவனை ஏற்றியே மகிழ்கின்றது
மீட்பராம் கடவுளையே என் மனம் புகழ்கின்றது
என்றென்றும் பாடிடும் எனதுள்ளமே
இறைவனின் வல்லமையே - 2
1. இறைவனின் உறைவிடம் ஏழைகளே
உழைத்து உயர்ந்திடும் கரங்களே - 2
ஏழை எளியவர் நிம்மதி அடைய
சுரண்டிய செல்வர்கள் ஓடியே மறைய - 2
நீதியின் அரசு எங்குமே வளர அழைக்கின்றது - இறைவனின்
2. இன்று முதல் தலைமுறை அறிந்திடுமே
வலியோரின் அரியணை சாய்ந்திடுமே - 2
நீதி உண்மையின் ஆட்சியும் உயர்ந்திட
தீமை வலியவர் வல்லமை குறைய - 2
கருக்குள்ள வார்த்தை சாட்சியாய் விளங்க அழைக்கின்றது
- இறைவனின்
மீட்பராம் கடவுளையே என் மனம் புகழ்கின்றது
என்றென்றும் பாடிடும் எனதுள்ளமே
இறைவனின் வல்லமையே - 2
1. இறைவனின் உறைவிடம் ஏழைகளே
உழைத்து உயர்ந்திடும் கரங்களே - 2
ஏழை எளியவர் நிம்மதி அடைய
சுரண்டிய செல்வர்கள் ஓடியே மறைய - 2
நீதியின் அரசு எங்குமே வளர அழைக்கின்றது - இறைவனின்
2. இன்று முதல் தலைமுறை அறிந்திடுமே
வலியோரின் அரியணை சாய்ந்திடுமே - 2
நீதி உண்மையின் ஆட்சியும் உயர்ந்திட
தீமை வலியவர் வல்லமை குறைய - 2
கருக்குள்ள வார்த்தை சாட்சியாய் விளங்க அழைக்கின்றது
- இறைவனின்