முகப்பு


1083.தஞ்சமென்று தாயே நெஞ்சம் மகிழ்ந்து உனையே
தஞ்சமென்று தாயே நெஞ்சம் மகிழ்ந்து உனையே
தேடியே வந்தோம் அம்மா
அருள் நிறைந்த மரியே ஆண்டவரின் தாயே
அருளாலே நிரப்பும் அம்மா
வாழ்க வாழ்க வாழ்க எங்கள் தாய்மரி
வாழ்க வாழ்க வாழ்க அன்பின் மாமரி

1. எலிசபெத்தின் முதிர்வயதில் ஓடோடி உதவினாய்
கானாவூர்த் திருமணத்தில் கண்ணீர் நீக்கிக் காத்திட்டாய்
திருமகனைக் காணாமல் கவலை கொண்டாயே
சிலுவை சுமந்த மகனைப் பின் தொடர்ந்தாயே
குறைதீர்க்கும் அம்மா நீவாழ்கவே
பலம் சேர்க்கும் தாயின் புகழ் ஓங்கவே - வாழ்க

2. தூய்மையென்னும் அணிகலனை ஆடையாக அணிந்திட்டாய்
தூய உந்தன் அன்பை என்னில் தளிர்த்து எழச் செய்திட்டாய்
ஆண்டவரின் கட்டளைக்கு அடிபணிந்தாயே
ஆவியிலே நிறைந்து நாளும் ஆண்டு வந்தாயே
மறை நீ வாழ்கவே
மலர் வீசும் உந்தன் மகிமை ஓங்கவே - வாழ்க