1092.தாரகை சூடும் மாமரியே
தாரகை சூடும் மாமரியே
தாளினைப் பணிந்தோம் காத்திடுவாய் - 2
1. தேவனை உலகுக்கு அளித்தவளே
தேடிய துணையைக் கொடுப்பவளே - 2
வாடிய மகவை அணைப்பவளே வாழிய ஞானியர் காவலியே
2. தென்னகக் கன்னி கடலலையும்
பன்னெழில் இமய மாமலையும் - 2
மென்னெழில் எமது தாயகமும் உன் புகழ் பணிந்தே பாடாதோ