முகப்பு


1096.தெய்வீகத் திருமகளே கல்யாணத் தாய் மாரியே
தெய்வீகத் திருமகளே கல்யாணத் தாய் மாரியே
உம் திருத்தலத்திலே பிள்ளைகள் கூடி வந்தோம்
வற்றாத நீரூற்றாம் உம் அன்பில் மகிழ
ஆனந்த தாலாட்டும் உம் மடியில் தவழ
சேய்முகம் தேடும் உந்தன் உறவில் எந்நாளும் மகிழந்திருப்பேன்

1. இறைவனின் திருவருளால் தாவீதின் குலமலரே
விண்ணோர்கள் சந்நிதியில் மணவாழ்வில் இணைந்தாயே
முதல் பெற்றோர் செய்த பாவம் தலைமுறையாய்த் தொடர்ந்திடவே
ஆம் என்ற வார்த்தையினால் மீட்பபைத் தந்தாயே
சிலுவைகள் சுமந்திடினும் தொடர் துன்பம் வந்திடினும்
தாயாக என்னைக் காத்தாயே
சேய்முகம் தேடும் தாய் உந்தன் உறவில்
எந்நாளும் மகிழ்ந்திருப்பேன் - 2

2. இருள் எமைச் சூழ்ந்த போது விண்மீனாய் ஒளி தந்தாய்
வறுமையில் வாடும்போது உயிர்தரும் மழையானாய்
பயணத்தில் பாதையாய் உழைப்பிலே வலுவானாய்
பிறர் துயர் தீர்த்தபோது உள்ளத்தின் இசையானாய்
உறவுகள் பிரிந்திடினும் உரிமைகள் இழந்திடினும்
தாயாக என்னைக் காத்தாயே - சேய்முகம்