1100.நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம்
நாதத்தின் இனிமையில் பண்பாடுவோம்
எந்நாளும் அன்னையின் புகழ்பாடுவோம்
நெஞ்சத்தில் நிறைந்திடும் நல் அன்னைக்குப்
புகழ்ப்பாக்கள் பாடிடுவோம் ஆ... அன்னையே வாழ்க - 2
அருளால் - 2 நிறைந்த - 2 அன்னையே நீ வாழ்க
1. இறைவனின் திருவுளத்தை
நிறைவேற்றிட மனமுவந்தாய் - 2 என்றும்
மறைபுகழ் உன் வழி இறையுளம் அறிந்திட
குறையின்றிக் காத்திடுவாய்
2. தரணிக்குத் தாயானாய்த் - திருத்
தாய்மையைப் பாடுகின்றோம் - 2 என்றும்
திருவாம் இயேசுவின் அன்பர்கள் ஆகிடத்
தாயே உன் அருள் தாராய்
எந்நாளும் அன்னையின் புகழ்பாடுவோம்
நெஞ்சத்தில் நிறைந்திடும் நல் அன்னைக்குப்
புகழ்ப்பாக்கள் பாடிடுவோம் ஆ... அன்னையே வாழ்க - 2
அருளால் - 2 நிறைந்த - 2 அன்னையே நீ வாழ்க
1. இறைவனின் திருவுளத்தை
நிறைவேற்றிட மனமுவந்தாய் - 2 என்றும்
மறைபுகழ் உன் வழி இறையுளம் அறிந்திட
குறையின்றிக் காத்திடுவாய்
2. தரணிக்குத் தாயானாய்த் - திருத்
தாய்மையைப் பாடுகின்றோம் - 2 என்றும்
திருவாம் இயேசுவின் அன்பர்கள் ஆகிடத்
தாயே உன் அருள் தாராய்