முகப்பு


1109.மதுமலர் முகமோ ஒளிர்நிறை நிலவோ
மதுமலர் முகமோ ஒளிர்நிறை நிலவோ
அழகுறும் தேவதையே
கதிரவன் சுடரோ கருணையின் வடிவோ
தரணியின் தாரகையே - 2
இந்த வானமும் பூமியும் தோன்றும் முன்னே
பரிபூரணத் தாயென நீ திகழ்ந்தாய் ஆவே - 4

1. ஆதிப்பிதாவின் திருமகளே
அனைத்துலகாளும் குலமகளே - 2
வானிறை வந்த சீதனமே
வளரு மாமந்திர ஆலயமே - 2 இந்த

2. ஆலயமணி உன் புகழ்பாடும்
அலைகடல் ஓசை இசையாகும் - 2
உறைபனி நிறைதிகழ் ஆசனத்தில்
உன் திரு அழகினை எமக்களிப்பாய் - 2 இந்த