முகப்பு


1113.மலையும் அழியலாம் மண்மேடு ஆகலாம்
மலையும் அழியலாம் மண்மேடு ஆகலாம்
அலைகடல் வற்றலாம் பெருவெளியாகலாம்
அழியாத அறமோடு நிலையான உமதன்பு
அழியாத கருணையம்மா - 2

ஆரோக்கிய மாதாவே அம்மா - 2
தீராத பிணி தீர்க்கும் திருத்தாயே வேளைநகர்
ஆரோக்கிய மாதாவே அம்மா - 2

1. வாடாத மலரல்லவா நீ வாடாத மலரல்லவா
இறைமகனுக்கும் வீடல்லவா - 2
அந்த வீடெங்கள் நிழலல்லவா - 2
இது வேளைநகர் செய்த தவமல்லவா

2. அலைகடல் ஓசை உன் பாமாலை
தவழ்ந்த உன் அன்புமொழி பூமாலை - 2
இயற்கை எழில் சிந்தும் சோலை - 2
வணங்கி மகிழ்வோம் உத்தமியின் தாளை - 2