முகப்பு


1116.மாசற்ற கன்னியே வாழ்க தேவன்னையே
மாசற்ற கன்னியே வாழ்க தேவன்னையே
தாசர்க்குதவியே நேசர்க்கருள்வாயே - 2

1. மானிடர்க் குற்ற சாபம் மாதுனக் கிலையே
ஆனந்த பிரதாபம் ஆனதுன் நிலையே

2. சாதந்த கனியாலே சாபமும் அழிவும்
நீ தந்த கனியால் நேசமும் உயிரும்

3. பாசஞ்செய் பிசாசான பையரவதனை
நாசமாய்க் குதிங்காலால் நைந்திட மிதித்தாய்