முகப்பு


1124.மூவோர் இறைவன் தேர்ந்து வரைந்த
மூவோர் இறைவன் தேர்ந்து வரைந்த
அழகின் ஓவியமே நீ அழகின் காவியமே
நிலவின் மேலே ஒளியாய் நின்று
எம்மை ஆள்பவளே திருக்கல்யாண தாணுவளே
ஒளிரும் உம்முக தரிசனம் இருளை நீக்கும் அற்புதமே
ஒளிரும் உம்முக தரிசனம் ஓயா அலைகளின் நம்பிக்கையே - 2

1. கல்வாரி மலையில் எமக்குத் தாயாய்
காலமெல்லாம் நீயே இருக்க
பிள்ளைகள் நாங்கள் உம்மைத் தேட
நீயே வருகின்றாய் எம்மைத் தேடி
உம்மை நம்பி வருவோர் எவரும்
வெறுமையோடு போவதில்லை
ஏனெனில் நீ தோன்றுமுன்னே
அருளின் நிறைவாய்த் தோன்றினாயே - ஒளிரும்

2. வியர்வை சிந்தும் குடும்பம் உமது
நிறைவு தருகின்ற வாழ்வும் உமதே
இறையால் எல்லாம் ஆகும் என்றே
உலகின் மீட்புக்காய் அடிமையானாய்
காக்கும் இறைவனின் வல்ல செயலை
எங்கள் வாழ்விலும் உணர வைத்தாய்
கவலையில்லா வாழ்வு தந்து
உம்மைப் புகழ ஆற்றல் தந்தாய் - ஒளிரும்