முகப்பு


1129.வாழ்க வாழ்க மரியே வாழ்க
வாழ்க வாழ்க மரியே வாழ்க
வரம் நிறை பரலோக செல்வியே வாழ்க
பால்வடியும் அம்புலியே - 2
நின் பதமதில் தாங்கிய மகத்துவ சீலியே
தானானே தானானே தானானேனா
தன் தானானே தானானே தன்னானேனா

1. வானுடை அணிந்திடும் தவமணியே
அருள் ஞான மனோகர தவமணியே
வானோர் பணிவதன் மணியே - என்றும்
செபமாலை அணிந்த சிகாமணியே

2. பாவிகட்காதரவா மணியே - உயர்
பரலோக பூலோக ராக்கினியே
தாவீது வம்ச மனோன்மணியே - 2
உந்தன் தயை விழிதிறந்தருள் கூறும் மணியே