முகப்பு


1152.தாவீது குலத்தின் மாமணியே
தாவீது குலத்தின் மாமணியே
தாவீது குலத்தின் மாமணியே எங்கள்
தாதை சூசை மாமுனியே

1. பாரினில் திருமகன் திருமறையைப் பரிவுடன் என்றும் காப்பவரே
பாரத மக்களைப் பாங்குடனே பரமனின் பதமதில் சேர்ப்பீரே

2. மரியும் மைந்தனும் உம்முடனே மரண நேரம் இருந்தனரே
மாந்தர்கள் எமக்கும் நீர் ஆறுதலை மரணநேரம் அளிப்பீரே

3. கடவுளின் செல்வத்திருமகனைக் கரங்களில் சுமந்து வளர்த்தவரே
கருணையில் ஆளும் திருமகனைக் கனிவுடன் நேசிக்கச் செய்வீரே