முகப்பு


1153.மதுமலர் நிறைகொடி கையில் ஏந்தும்
மதுமலர் நிறைகொடி கையில் ஏந்தும்
மாட்சிமை நிறைசூசை மாமுனியே
துதிவளர் உமது நற்பதம் வந்தோம்
துணைசெய்து எம்மை ஆளுந் தாதையரே - 2

1. வான் உலகிழந்ததால் கர்வமுற்ற
வன்மனக் கூளியின் வலைஅறுக்க
தான் மனுவாய் உதித்த கடவுள்
தாதையாஞ் சூசை உன்தஞ்சம் வந்தோம் - 2

2. ஒளிநிறை கதிரோனை ஆடைஎனும்
உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த
துளிநிகர் அருள்மொழி மாமரியாள்
துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய் - 2

3. தாய் தந்தையிலால் மனம் வாடி
தயங்கிடும் பாலர்போல் முகம்வாடி
வாய்விட்டு அழுதுந்தன் சகாயம் என்றும்
வருந்திக் கேட்டிடவந்தோம் மாதவனே