முகப்பு


1154.மறையோர் புகழும் மாவளனே
மறையோர் புகழும் மாவளனே
மாமலர் மகிமையைக் கொண்டவரே

1. தேவமகன் திருத்தந்தையென்றே
தேனுலகாள் மரித்துணையென்றே
மாதவம் செய்தாய் மகத்துவம் கொண்டாய்
மாநில வாழ்வினில் மேன்மைகொண்டாய்

2. திருச்சபைக்கே பெரும் தந்தையரே
திருஇல்லம் காத்திடும் எந்தையரே
திருமுறை வழுவா நீதியின் கருவாய்த்
திகழ்ந்திடும் எங்கள் காவலரே