முகப்பு


1155.மாநிலம் போற்றிடும் மாவளனே திருமாமரி காவலனே
மாநிலம் போற்றிடும் மாவளனே திருமாமரி காவலனே - 2
புனிதருள் முதல்வனே புகழ் சுமந்த - 2
முனிவளனே உம் பதம் பணிந்தோம் - 2

1. உழைப்பதன் வருத்தம் நீங்கியதோ
இறைவன் கையில் தவழ்வதனால் - 2
மலை போல் எழும் துயர் வாழ்வினிலே - 2
மறைந்ததுவே தாய்மரி துணையால்

2. இறைவனின் பணிகள் செய்வதற்கு
இரவும் நண்பகலும் உமக்கு
மறைதரும் அருள்மொழி பெறுவதற்கு - 2
மனத்திடம் தா உன் அடியவர்க்கு