முகப்பு


1156.வாழ்க இயேசு கைத்தாதையே தேவமாதாவின் பத்தாவே
வாழ்க இயேசு கைத்தாதையே தேவமாதாவின் பத்தாவே
தாழ்மை மிகுந்தவரே வாழ்க வாழ்க

1. மானிடர்க்குள்ளே பெரிய வரங்கள் நிறைந்தவரே
வானவர் மகிமையே வாழ்க வாழ்க

2. துன்பப்படுவோர்களுக்கும் துயரத்தால் வாடுவோர்க்கும்
இன்பமான தஞ்சமே வாழ்க வாழ்க

3. மாசில்லாத கன்னிகைக்கு மணவாளன் ஆனவரே
தூய சூசையப்பரே வாழ்க வாழ்க

4. இயேசுசுமரி இருவர் கையில் ஏந்தி அணைக்கப்பட்டு நீர்
நேசமாய் மரித்தீரே வாழ்க வாழ்க

5. இத்தனை பாக்யம் பெற்ற நீர் என் மரணவேளையிலும்
ஒத்தாசையாய் இருப்பீரே வாழ்க வாழ்க