1158.அந்தோனி மாதவா அன்பான போதகா
அந்தோனி மாதவா அன்பான போதகா
வந்தோம் உன் மைந்தர் கூடி உந்தன் பாதம் வாழ்த்தவே
பொன்னான நேரமே உன்னாசீர் வேணுமே
உன் நாமத்தைப் புகழ்ந்து பாடி என்றென்றும் வாழ்த்திடுவோம்
1. விண்ணாளும் வேந்தனைக் கைக்கொண்டு வாழ்கிறார்
மண்ணோர் குறை தீர்க்கும் மாதவா
உல்லாசம் தேடிடும் சல்லாப வாழ்வையும்
எல்லாமே நீ துறந்து வாழ்ந்தாய்
தொல்லை புரிந்திடும் பேய்களில்லாமலே
விரட்டியே முன் எமைக் காப்பாய்
2. தெய்வீகன் உந்தனைக் கைகூப்பி வணங்கினோம்
எங்கள் குறைதீர்ப்பாய் மாதவா
அலைமோதும் உலகிலே வாழ்ந்திடும் யாவரும்
உன்னருளால் காக்க வேண்டும் துணைவா
விந்தை புரிந்திடும் அந்தோனி மாதவா
என்றும் எங்கள் குறை தீர்ப்பாய்