முகப்பு


1161.அன்புப் பெருக்கால் இறைவனை - இந்த
அன்புப் பெருக்கால் இறைவனை - இந்த
உலகிற்கு அறிவித்த புனிதரே - 2
பதுவை அந்தோனியாரே
உம்மை வணங்கியே உம்அடி தொழுகின்றோம் - 2

1. தாழ்ச்சியில் உள்ளம் சிறந்திட விளங்கிட
செபமும் தவமும் செய்தவரே
பூவை நகரினில் வலமே வந்து - 2
என்றும் எம்மைக் காப்பவரே
இறைவழியில் நமை நடத்தி என்றும் காத்திடுவார்

2. மனத்தில் நிறைவு அடைந்திட மகிழ்ந்திட
பகிர்ந்து வாழச் சொன்னவரே
விண்ணக வீட்டின் கைம்மாறு பெறவே - 2
அன்புப் பணியில் வளர்ந்திடவே
நான் செல்லும் பாதையெல்லாம் துணையாய் வந்திடுவார்