முகப்பு


1167.கர்த்தரை கரத்தில் ஏந்தி அற்புதம் பல செய்திட
கர்த்தரை கரத்தில் ஏந்தி அற்புதம் பல செய்திட
உற்பவித்த உத்தமரே அந்தோனியார் - 2 நம்மில்
அற்பசுக பாவம் போக்கி அர்த்தமற்ற வாழ்வை மாற்றும்
நற்றவரே நல்லவரே அந்தோனியார்

1. கோவேறு கழுதை கூட கூடி நின்ற கூட்டங் காண
துணிந்து வணங்கச் செய்த அந்தோனியார் - 2
சேட்டை செய்யும் சாத்தானுக்கும் சாட்டையடி கொண்டு - அதன்
கோட்டை தனைத் தகர்த்திட்ட அந்தோனியார் - 2

2. காணாமல் போன பொருளைக் காணும்படி செய்து அதை
கண்டெடுக்கச் செய்யவல்ல அந்தோனியார் - 2
புண்ணியம் பல புரிந்து மண்ணில் இன்றும் நிலைத்திட்ட
என்னில் நிறை விண்ணவரே அந்தோனியார் - 2