முகப்பு


1172.நன்னாக்கு அழியாத பதுவைப் புனிதரே
நன்னாக்கு அழியாத பதுவைப் புனிதரே - பொய்த்
தப்பறைகளின் சம்மட்டியே அந்தோனியாரே
இறை இயற்கைநேயமும் மனித மாண்பு மேன்மையும் -2
ஏற்று வாழ்ந்த நல்லவரே கோடி அற்புதரே

1. வணங்காத கழுத்துடை மாந்தர் நடுவிலே
நற்கருணையைக் கழுதை வணங்கக் காணச் செய்தவரே
ஆட்டம் காட்டும் பேய்களை சிலுவை காட்டியே
ஓட்டம் காணச் செய்திடும் வழிகாட்டியே
தூய உள்ளம் கொண்டு பேறுபெற்றவரே
குழந்தை இயேசுவையே ஏந்தி நின்றவரே
அன்புக் கட்டளைக் கடைப்பிடித்து இறைத்திட்டம் நிறைவேற்றி
மனம் மாறிட உயர்ந்தோங்கிட கற்றுத் தந்தவரே

2. கட்டடத்திலிருந்து விழுந்த தொழிலாளரை
கேடின்றிப் பாதுகாக்க இரக்கம் கொண்டவரே
இறையாட்சி விரும்பாத மக்கள் அறிந்திட
கடல் மீன்கள் நற்செய்தி கேட்கச் செய்தவரே
நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டவரே
கோடி புதுமை செய்ய ஆற்றல் பெற்றவரே - அன்பு........