முகப்பு


1176.புதுமைகளின் நாயகனே பதுவையினை ஆள்பவரே
புதுமைகளின் நாயகனே பதுவையினை ஆள்பவரே
கோடி அற்புதரே அந்தோனியாரே - எம்
புகலிடம் நீரே அந்தோனியாரே - 2

1. மழலை இயேசுவையே கரங்களில் பெற்றவரே
நன்னாக்கு அழியாத நற்பேறு கொண்டவரே - 2
துள்ளி வரும் மீன்களுக்கும் நற்செய்தி தந்தவரே - 2
தவறிடும் பொருள்களையும் கண்டெடுக்கச் செய்தவரே
தவறிடும் பொருள்களையும் பரிசாய்த் தருபவரே
எங்க புனித அந்தோனியாரே உம்மைவாழ்த்திப் பாடவந்தோமே
பாடும் குரலைக் கேட்டு பாசமழை பொழிவாய் - 2
எங்க புனித அந்தோனியாரே
உம்மை வாழ்த்திப் பாட வந்தோமே

2. சாத்தானின் சேட்டைகளை சாட்டையால் ஒழித்தவரே
சாவின் விளிம்பினிலும் வாழ்வு தந்தவரே - 2
நற்கருணை வல்லமையை உலகிற்கு உரைத்தவரே - 2
நம்பி வரும் மக்களுக்கு ஆறுதல் தருபவரே
நம்பி வரும் மக்களுக்கு நல்லாசீர் தருபவரே - எங்க புனித