முகப்பு


1177.போற்றிடுவோம் பதுவையின் புனிதரை
போற்றிடுவோம் பதுவையின் புனிதரை
வாழ்த்திடுவோம் வழிகாட்டும் விண்மீனை
பதுவை தந்த நாயகரே புதுமை செய்யும் வல்லவரே
எங்கள் ஊரின் காவலரே புனித அந்தோனியாரே

1. வார்த்தை வழி நின்று வல்லமை பெற்றார் - அவர்
நன்னாக்கு உடையவரே
செபத்தில் மூழ்கியே செயம் கண்டார் - அவர்
நற்கருணை சக்தியால் நலம் தரும் - புனிதரே
பொற்பாதம் நாடி அன்றாடம் வருவோம்
அற்புதங்கள் அடைந்திடுவோம் (அவர்) - பதுவை தந்த

2. தேடும் மாந்தர் குறை தீர்த்திடுவார்
வரம் கோடியாய் அளித்திடுவார்
நோய்கள் பேய்கள் எல்லாம் போக்கிடுவார்
மனநலம் தந்து காத்திடுவார்
கண்கலங்கும் பக்தரைக் கைவிடாத புனிதரின்
உதவியைத் தேடுவோம் உறவினை நாடுவோம்
உவப்புடன் வாழ்ந்திடுவோம் - பதுவை தந்த நாயகரே