முகப்பு


1179.இறைமணம் பரப்பிய மறைத்தூதரே
இறைமணம் பரப்பிய மறைத்தூதரே
மறைநெறி காத்திட்ட சவேரியாரே

1. வாழ்வெல்லாம் இறைவனைப் புகழ்ந்தவர் நீர்
வழியெல்லாம் அவர் கரம் பிடித்தவர் நீர் - 2
சோதனை வாழ்வினில் வென்றவர் நீர்
சாதனை எங்கும் படைத்தவர் நீர்
எங்கள் நற்போதகரே வந்தோம் உம் பாதம் தன்னில்

2. அன்பாய் உன் புகழ்தனைப் பாடிடுவோம்
முத்துக்குளித்துறையின் முனிவரே நீர்
தத்துவம் பல கற்ற கலைஞனும் நீர் - 2
ஆன்ம தாகத்தால் அலைந்தவர் நீர்
அணையாத சோதியாய் நிலைத்தவர் நீர் - எங்கள்