முகப்பு


1185.குழந்தை இயேசுவின் அன்பு தெரசம்மாளே
குழந்தை இயேசுவின் அன்பு தெரசம்மாளே
குறைகள் அகல தேடி வந்தோம் பாருமம்மா
குறைகள் தீருமம்மா - 2

1. ஆண்டவரின் வழி சாட்சியாக வாழ்ந்தாய் நீ அம்மா - 2
அன்பு மலர்களை எம்மில் பொழிவாய் அம்மா - 2

2. அன்பின் வழி சாட்சியாக வாழ்ந்தாய் நீ அம்மா - 2
அண்டி வந்தோர்க்கு ஆறுதலை அருள்வாய் அம்மா - 2

3. பரமன் இயேசு கரங்களிலே நீ தவழ்ந்தாய் அம்மா - 2
பாவி எமக்காய்ப் பரிந்து பேசி அருள்வாய் அம்மா - 2