முகப்பு


1186.சிறுமலரே அருள்மலரே
சிறுமலரே அருள்மலரே
திருமறைக்கோயிலில் பொலிவுற மலர்ந்த
நறுமணமே கமழ்மலரே - 2 இந்த
நானிலம் வியந்து புகழ்மலரே - 2

1. மன்னவன் இயேசுவின் மனமலரே - 2 அவர்
மகிழ்வுற வாழ்ந்த எழில்மலரே
அன்பெனும் தேன் நிறைமலரே - 2 அதை
ஆண்டவர்க்களித்த புதுமலரே - 2

2. வானகம் மேவிய ஒருமலரே - 2 எம்
வாழ்வினில் மேன்மை தருமலரே
மோனத்திலே தவழ்மலரே - 2 வான்
முடிபெற எமக்கும் வரமருளே - 2