முகப்பு


1189.மலர்மாரிப் பொழியும் சிறுமலரே
மலர்மாரிப் பொழியும் சிறுமலரே
மன்னன் இயேசுவின் தெரசாளே
அன்பின் பலியாய்த் திகழ்ந்திடும் நன்மலரே
சீவிய ஊற்றில் திளைத்திடும் கன்னியே

1. திருமறை நாடெங்கும் பரவவே
திருச்சபை அளித்த எம் காவலியே
பாரினில் நாளும் புகழ்வோம் உம்மையே - 2
பரிவுடன் சேர்ப்பாய் பரனிடம் எம்மையே

2. வானில் நின்று ரோசா மலரைப்
பொழிவேன் என்றாய் மகிழ்வுடனே
வானில் எம்மையும் சேர்த்திடுவீரே
வரமே பொழிந்து காத்திடுவீரே